Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இது எங்க இருந்து வந்துச்சு…. அலறி அடித்து ஓடிய மது பிரியர்கள்…. கடைக்குள் நீடித்த பதற்றம்….!!

டாஸ்மாக் கடைக்குள் பாம்பு நுழைந்து விட்டதால் மது பிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, மதியம் சுமார் ஒரு மணி அளவில் டாஸ்மாக் கடைக்குள் வயல் வெளியிலிருந்து சாரை பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இந்நிலையில் பாம்பைப் பார்த்ததும் மது வாங்க நின்ற மது பிரியர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினருடன் இணைந்து அப்பகுதியில் வசிக்கும் பாம்பு பிடிக்கும் ஆறுமுகம் என்பவர் சுமார் ஆறு அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து விட்டார். அதன் பிறகு பாம்பை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் கொண்டு விட்டனர்.

Categories

Tech |