Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுல கொடிய விஷம் இருக்கு…. குடியிருப்புக்குள் நுழைந்த கட்டு விரியன் பாம்பு…. அச்சத்தில் நடுங்கிய பொதுமக்கள்….!!

கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பளம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் வீதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் 4 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு நுழைந்துவிட்டது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 15 நிமிடங்கள் போராடி புதருக்குள் பதுங்கியிருந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து விட்டனர். அதன் பிறகு அந்த கட்டு விரியன் பாம்பை ஊதியூர் மலை பகுதியில் உள்ள காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டுள்ளனர்.

Categories

Tech |