Categories
உலக செய்திகள்

ஷூக்குள் இருந்து படமெடுத்த பாம்பு… வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ…!!!

வனசேவை அதிகாரி ஒருவர் ஒரு ஷூ-விலிருந்து பாம்பு வெளியான வீடியோவை வெளியிட்டு மக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கிறார்.

வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஒரு பெண் ஷூ-விற்குள் இரும்பு கம்பியை வைத்து தள்ளுகிறார். அப்போது, அதிலிருந்து ஒரு பாம்பு வெளியேறி படமெடுக்கிறது.

அதன்பிறகு, அவர் அதனை நேக்காக பிடித்து விடுகிறார். இது பற்றி அந்த அதிகாரி குறிப்பிட்டிருப்பதாவது, பருவமழை சமயங்களில் நமக்கு தெரியாத இடங்களில் பாம்புகள் காணப்படுகிறது.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், ஏதேனும் இருக்கும் என்று சந்தேகமடைந்தால் உடனடியாக பயிற்சி பெற்ற பணியாளர்களை அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |