அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கோவிலில் திரண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டியிலிருந்து வேங்கானூர் செல்லும் ரோட்டில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வந்து செல்வதால் வடிவேல் என்பவர் அம்மனுக்கு பூஜைகள் செய்து கோவிலை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கம் போல் அம்மனுக்கு பூஜை செய்வதற்காக வடிவேல் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது வடிவேலு அம்மனுக்கு அருகில் சென்ற போது அங்கு நாகப்பாம்பு அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் அந்த கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பு 30 நிமிடங்களுக்கு பிறகு காட்டுக்குள் சென்று விட்டது.