Categories
சென்னை மாவட்ட செய்திகள்

144…. ஒருத்தரையும் காணோம்…. பைக்கில் வலம் வந்த பெண்களிடம் செயின் பறிப்பு…. வாலிபர் கைது….!!

சென்னை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை திருமங்கலத்தில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது உண்டு. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. ஆகையால் பெண் சங்கிலி பறிப்பு அச்சத்தால் தனது சங்கிலியை கழற்றி கையில் வைத்திருந்ததாகவும் அதை கொள்ளையர்கள் பறித்து சென்றதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து,

அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று சூளைமேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் நிற்காமல் செல்ல அவரை துரத்தி பிடித்த காவல்துறையினர் விசாரித்ததில் அந்த நபர்தான் திருமங்கலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டது என்பதை கண்டுபிடித்தனர். மேலும் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு நபரையும்  தேடி வருகின்றனர்.

Categories

Tech |