இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஓமிக்ரானின் அறிகுறிகளில் வழக்கமான ஜலதோஷமும் உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் தற்போது 100க்கும் மேலான நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் ஓமிக்ரான் அறிகுறிகளில் வழக்கமான ஜலதோஷமும் உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி வறண்டுபோன தொண்டை, தலைவலி, மூக்கு ஒழுகுதல் உடல்வலி போன்ற அறிகுறிகளும் ஓமிக்ரான் பாதிப்பில் தென்பட்டுள்ளது. மேலும் ஜலதோஷம் பிடித்த நபர்களை பரிசோதனை செய்கையில் அவர்களுக்கு ஓமிக்ரானோ அல்லது கொரோனாவோ உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.