Categories
சினிமா தமிழ் சினிமா

விவாகரத்து விஷயத்தில் நயன்தாராவை பின்பற்றும் சினேகா…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதனையடுத்து திருமணமான 10 ஆண்டுகள் கழித்து சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் வதந்தி பரவியது. சினேகா பல்வேறு புகைப்படத்தை வெளியிட்டும் விவாகரத்து பேச்சு அடங்கவில்லை. இந்நிலையில், சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் சேர்ந்து நெருக்கமான போட்டோசூட் நடத்தியுள்ளனர்.

அந்த புகைப்படங்களை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதே போல தான் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரிய இருப்பதாக வதந்திகள் பரவியது. இதற்கு நயன்தாரா புகைப்படம் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எனவே விவாகரத்து விஷயத்தில் நயன்தாராவை சினேகா பின்பற்றி புகைப்படத்தை வெளியிட்டு விவாகரத்து விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CmgJN8IyqMR/

Categories

Tech |