அமெரிக்காவில் கடும் பனிப்புயல் உருவாகியிருப்பதால் பல்வேறு நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் பல நகரங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதில், முக்கியமாக பென்சில்வேனியா, வாஷிங்டன் மாகாணங்களில் பலமான காற்று வீசுவதோடு தொடர்ந்து பனி கொட்டிய வண்ணம் இருக்கிறது. இதில் மரங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகள் பனியில் மூழ்கியது போல் காணப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், மேம்பாலங்கள், சாலைகளிலும் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கிறது. இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடலோரப் பகுதிகளில் சுமார் ஒரு அடிக்கு பனி பொழிந்திருக்கிறது. எனவே, அங்கு 1,17,000-த்திற்கும் அதிகமான வீடுகளை சேர்ந்த மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.