Categories
மாநில செய்திகள்

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 2,106 பேருக்கு கொரோனா தொற்று…சுகாதாரத்துறை!!

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,106 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று வரை தமிழகத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம், ரயில், கார், பேருந்து மூலம் 2,00,081 பேர் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 9 பேர், கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து 4 பேர், தாய்லாந்தில் இருந்து 3 பேர், சவூதி அரேபியாவில் இருந்து 2 பேர், யு.ஏ.இ-ல் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 19,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Categories

Tech |