Categories
உலக செய்திகள்

அதிக இழப்புகளை சந்தித்த நாடு..! இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 31.1 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக அளவில் அமெரிக்கா கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா அதிக அளவில் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பைசர் பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட நிறுவனங்களுடைய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

அதன்படி அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதுவரை மொத்தம் 31,18,86,674 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் மொத்தம் 31,06,45,827 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கடந்த 14-ஆம் தேதி வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்க சுகாதாரத்துறை இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 17,46,74,144 பேர் போட்டு கொண்டுள்ளதாகவும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 14,57,68,367 பேர் போட்டு கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |