இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு 33 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அங்குள்ள பொதுமக்களுக்கு பைசர்/பையோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களுக்கு இதுவரை 33,06,04,253 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் மொத்தம் 32,99,70,551 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க சுகாதாரத்துறை இதுவரை அமெரிக்காவில் முதல் டோஸ் தடுப்பூசியை 18,24,12,776 பேரும், 2 டோஸ் தடுப்பூசியை சுமார் 15,73,23,738 பேரும் போட்டுக் கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.