தன்னுடைய வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டை எடுக்காமல் இருந்ததே இல்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த போது,”நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி இத்தனை நாட்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை. இப்போது மீண்டும் தொடங்கும் போது சவாலானதாக இருக்கும் விளையாடும் வரை என்னுடைய உடம்பு எந்த அளவுக்கு தகுதியாக இருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்த 4 மாதங்களாக உடல் ரீதியாக உறுதியாகவே இருக்கிறேன். ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போதைக்கு எந்த அவசரமும் இல்லை.
நான் பயிற்சி மைதானத்துக்கு சென்று ஈடுபட இருக்கிறேன். அப்போதுதான் துபாயின் 40 டிகிரி வெயிலுக்கு விளையாட முடியும். ஆனால் அது அவ்வளவு சாதாரணமானதல்ல. ஐபிஎல் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம்பிக்கை அதிகமாகும் இதற்கு முன்பு ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அந்த இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.