இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் கட்சிகளின் வியூகங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. பரபரப்பு பேட்டிகளும், அதிரடியான விவாதங்களும் அனல் பறந்து கொண்டு இருக்கும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க ஸ்டாலின் சகோதரருமான முக அழகிரியின் அரசியல் நிலைப்பாடு என்ன ? அவர் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறார் ? என்று சமீப காலமாக பேசப்பட்டு வந்தது.
குறிப்பாக தனிக்கட்சி தொடங்குவார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், அழகிரியிடம் நாங்கள் பேசவில்லை, ஆனால் அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று தெரிவித்திருந்தார், அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது முக அழகிரி,
அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி அல்லது அதற்குப் பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை பற்றி முடிவெடுப்பேன் என அழகிரி தெரிவித்துள்ளார்.