Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

துளசியில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா?

துளசி…

இதில் துளசி கருந்துளசி ,செந்துளசி, கல்துளசி ,முள்துளசி ,முதலிய பல இனங்கள் உள்ளன.அவற்றின் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்!!.

1. துளசிப் பூங்கொத்துடன் வசம்பு திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும்.

2. இலைகளை புட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி காலை மாலை என இரு வேளை குடித்து வர பசியை அதிகமாக்கும்.இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும், ரத்தம் சுத்தமாகும், தாய்ப்பால் பெருகும்.

3. துளசி சாறு 10 மில்லி, தேன் 50 மில்லி, வெந்நீர் 50 மில்லி, கலந்து காலை மாலை என இரு வேளை 40 நாட்கள் சாப்பிட இருதய நோய் குணமாகும்.

4. துளசி சாறில் மாசிக்காயை நன்கு இழைத்து அந்த விழுதை இருவேளை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

5. துளசி இலைச்சாறு ,வெங்காயச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு ,விளக்கெண்ணெய், இவற்றை சம அளவு எடுத்து காய்ச்சி 15 முதல் 30 மில்லி வீதம்  தினமும்  உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

6. துளசி விதையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர வெள்ளை படுதல் , வெட்டை ,மேகநோய் குணமாகும்.

Categories

Tech |