Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா….? கலெக்ஷனில் தூள் பறக்கும் சிம்புவின் “பத்து தல”…..!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த சில வருடங்களாக பிரச்சனைகளின் காரணமாக திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சிம்பு மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டு மாநாடு திரைப்படத்தில் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்து வெற்றி கரமாக ஓடிய நிலையில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க சித்தி இத்னானி ஹீரோயின் ஆக நடித்திருந்தார்‌. இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஓடிடி உரிமையை தற்போது அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரூபாய் 26 கோடிக்கு ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Categories

Tech |