சீனாவில் இறந்தவர்களில் செயற்கை சுவாச கருவிகள் இல்லாத காரணத்தினால் தான் பலர் இறந்துள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது
சீனாவின் முதன் முதலில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா 81953 பேரை பாதித்து 3,339 பேரின் உயிரை எடுத்தது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் மட்டும் இத்தனை பேர் உயிரிழக்கவில்லை வேறு சில காரணங்களும் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இறந்தவர்களில் பலர் செயற்கை சுவாச வசதி கிடைக்காத காரணத்தினால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. நோயாளிகளில் ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே சரியான தீவிர சுவாச வசதி கிடைக்கப் பெற்றதாகவும் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி மற்ற காரணங்களினாலும் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து ரத்த அழுத்தம் ஏற்படும் நிலையில் உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கவேண்டும். அவசர சூழ்நிலையின் காரணமாக மருத்துவ பணிக்கு அழைக்க பட்ட பலருக்கு பயிற்சி இல்லாத நிலையில் பணியில் ஈடுபடுத்தியதால் இக்கட்டான சூழ்நிலையில் கருவியினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தெரியாமல் நோயாளிகளுக்கு சரியான சமயம் ஆக்சிஜன் வசதியை செய்து கொடுக்காதே ரத்த அழுத்தம் ஏற்பட்டு மரணம் ஏற்பட காரணம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இறந்தவர்கள் பலருக்கும் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உள்ள காரணத்தினால் ஆய்வு முடிவுகள் உண்மை என நம்பப்படுகிறது. மனித உடலில் புகுந்து முதலில் தாக்குவது நுரையீரலை எனும்பொழுது செயற்கை சுவாச கருவி தான் சிகிச்சைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஆகவே செயற்கை சுவாச கருவி இல்லாத காரணத்தினால் தான் பலரும் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சித் தகவலை ஆய்வு தகவல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.