பிரிட்டன் ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முந்தய சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளது.
பிரிட்டனில் பிப்ரவரியில் இலக்கை அடைய ஒரு நாளைக்கு 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக தினசரி 491,970 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பிரிட்டன் சாதனை படைத்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் 598,389 பேருக்கு தடுப்பூசி செலுத்தி முந்தைய சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது. பிரிட்டனில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் இதுவரை 9 மில்லியன் மக்கள் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் 20 சதவீத மக்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதை மறுத்து வருகின்றனர்.