ஃபேஸ்புக் மூலம் நான்கு பேரை திருமணம் செய்து கொண்ட பெண் தற்போது ஐந்தாவதாக வேறு ஒரு நபரிடம் குடும்பம் நடத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணகுடியைச் சேர்ந்தவர் பாலகுரு என்பவர். 26 வயதான இவர் டிரைவராக வேலை பார்த்து வருக்கிறார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மயிலாடுதுறை மூவலூர் சேர்ந்த மீரா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் மீராவை பாலமுருகன் திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் சில வாரங்களுக்குப் பிறகு தன் மனைவியின் பெயர் மீரா இல்லை என்பதும் அவர் பெயர் ரஜபுநிஷா என்பதும் பாலமுருகனுக்கு தெரியவந்தது. மேலும் அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள் என்பதும் தெரியவந்தது. மனைவி பொய் கூறியதாக இருந்தாலும் பாலகுரு கொண்ட காதலால் திருமண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பாலகுரு வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வேறொரு ஆண் வந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த பாலகுரு மனைவியின் செல்போனை பார்த்தார். அதில் தன் மனைவி திண்டுக்கல்லைச் சேர்ந்த பார்த்திபன் உள்பட பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார்.
பின்பு அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதில் கோபமுற்ற நிஷா தன் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி கிளம்பிவிட்டார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. அதன்பின் விசாரித்ததில் அவர் திண்டுக்கல்லில் இருக்கும் பார்த்திபன் என்பவருடன் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. நிஷா, தன்னை நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று தகவலறிந்த பார்த்திபன் அதிர்ச்சியில் உறைந்தார்.
வீட்டை விட்டு சென்ற ரஜபுநிஷா 1 பவுன் செயின் மற்றும் 70 ஆயிரம் பணத்தை எடுத்துக்
சென்றதாக அவரது தாயாரிடம் பாலமுருகன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நிஷாவின் தாயார் மும்தாஜ், தன் மகள் பலபேரை இதுபோல் திருமணம் செய்துள்ளதாகவும், நீ இதில் இருந்து ஒதுங்கிக் கொள் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதனால் பாலமுருகன் மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் புகார் மனு அளித்துள்ளார். டிக் டாக் மூலம் பேஸ்புக்கில் தனது வீடியோவை பதிவிட்ட நிஷா அதில் வரும் கமெண்ட் அனுப்புபவர்களை தேர்வு செய்து காதல் ஆசை கூறி திருமணம் செய்து வந்துள்ளார். இதுவரை நான்கு பேர் திருமணம் செய்து கொண்ட நிஷாவிடம் தற்போது ஐந்தாவதாக சிக்கிக் கொள்வது பார்திபன் என்று பாலமுருகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.