பால் என்றால் பசும்பாலா எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா எதுவுமே தெரியாத பாக்கெட் பாலா என சந்தேகத்துடன் சாப்பிட வேண்டியுள்ளது. பாலின் தரத்தையும் குணத்தையும் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம் .
பசும்பால்:
இயல்பாகவே இது இனிப்பானது குளிர்ச்சி தரும் அதே சமயம் இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது ஆனால் குடித்த உடனே புத்துணர்ச்சி தந்து உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது சோர்வாக இருப்பவர்களுக்கும் தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு ரத்த கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் நல்ல மருந்து.
எருமைப்பால்:
பசும்பாலை விடக் குளிர்ச்சியானது நிறைந்த கொழுப்புச்சத்து கொண்டது பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் ஜீரணமாக தாமதமாகும் .செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
ஆட்டுப்பால்:
அண்ணல் காந்தி அருந்தியதும் ஆட்டுப்பால் தாங்க இதிலிருந்தே தெரிகிறது அதன் மகத்தான மருத்துவ குணம் இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது. பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் அதிகப் பால் சுரக்கும். உடல் பருமனால், மாதவிடாய் சீராக இல்லாத நிலையில் குழந்தைச் செல்வம் பெற முடியாத நிலை போன்றவை ஏற்பட்டு பெரும்பாலான பெண்கள் வேதனைப்படுகிறார்கள் இவற்றை போக்கவல்லது வெள்ளாட்டுப்பால்.