ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய வாகனசோதனையில் 600க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜா உத்தரவின்படி காவல்துறையின் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 32 பேரிடமும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 424 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 52 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 127 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
இதனையடுத்து சாலை விதிகளை பின்பற்றாமல் சென்றவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓடியவர்கள், தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து மொத்தம் 84,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.