மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாஜகவில் இணையவுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார்.
ஆனால் மாநிலங்களவை தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு , திக்விஜய் சிங்கிற்கு தான் மாநிலங்கவை பதவி உறுதியாகியதால் மிகவும் அதிர்ச்சி ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சி தலைமையின் தொடர்பை புறக்கணித்தார். அதோடு அவரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேர் பெங்களுருவில் தங்கவைக்கப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷாவை சந்தித்து , காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மத்தியபிரதேச அதிர்ச்சி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மாநில காங்கிரஸ் நடவடிக்கையை கட்சி ஏற்றுக்கொண்டதாக பொதுச்செயலா வேணுகோபால் அறிக்கை. சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியா நீக்கம் என காங்கிரஸ் அறிவிப்பு. ஜோதிராதித்ய சிந்தியாவின் ராஜினாமா கடிதம் வெளியான நிலையில், நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் அவர் பாஜகவில் சேர்வார் என்று எதிர்பாக்கப்பட்டுகின்றது.ஆனால் பாஜகவில் சேர்ந்துள்ளதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தனது விக்கி பீடியாவில் அவர் பாஜக உறுப்பினர் என்று பதிவிடுபட்டுள்ளது. ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்த நடவடிக்கை ஏறக்குறைய 30 நிமிடங்கள் மட்டுமே நடந்த நிலையில் விக்கி பீடியாவில் அவர் ஒரு பாஜக உறுப்பினர் என்று பதிவிட்டுள்ளது.