Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இவ்வளவு பண்ணியும் குறையல…… இன்னும் கட்டுப்பாட போடுவோம் ? முதல்வர் ஆலோசனை …!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலேசனை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் 60 சதவீதத்திற்கு மேலான எண்ணிக்கையில் கொரோனா இருக்கிறது. தற்போது வரை 15776 பேருக்கு சென்னையில் மட்டும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், IAS அதிகாரி ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளார். பல்வேறு மாவட்டங்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சென்னை, அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தளர்வுகள் என்பது மிகக் குறைவாகவே கொடுக்கபட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் பார்த்தோமானால் சென்னையில் 934 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, IPS அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் தற்போதைய நிலையில் ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலத்தில் மிக அதிக அளவில் தொற்று கண்டறிப்பட்டுள்ளது.  ராயபுரத்தில் மட்டும் 3,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் என்பது அரசுக்கு இருக்கிறது. இந்த கூட்டத்தில் இதுகுறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |