Categories
தேசிய செய்திகள்

“2019ல் மட்டும்”… இவ்வளவு தற்கொலையா…??… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

2019ம் ஆண்டில் மட்டும் தற்கொலை மற்றும் விபத்தால் இறந்தோரின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி உள்ளது என தேசிய குற்றப் பதிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சென்ற ஆண்டில் மட்டும் ஒவ்வொரு 4 நிமிடத்திற்க்கும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருப்பதாக,தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய குற்றப்பதிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆண்டு சுமார் 1,39,000 பேர் தற்கொலை செய்து கொண்டும், 4, 21,000 பேர் விபத்துக்களிலும் உயிரிழந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

போக்குவரத்து விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 85 சதவிதம் பேர் சாலை விபத்துக்களிலும், 15 சதவிதம் பேர் ரயில் போக்குவரத்து விபத்துக்களிலும் சிக்கியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2018ஐ காட்டிலும் சென்ற ஆண்டில் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் விகிதம் 2.3 சதவிதமும், தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.4 சதவிதம் உயர்ந்துள்ளாதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |