பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் காலில் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது. சிறுநீர் கூட படுக்கையில் இருந்து தான் கழிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். காலில் பெரிய கட்டு உடன் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் போட்டோவை சமீபத்தில் யாஷிகா வெளியிட்ட நிலையில், தற்போது உடலில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கு மிகப்பெரிய தையல் போடப்பட்டுள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.