Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அப்போ கிண்டல் செஞ்சீங்க…. இப்போ என்ன ஆச்சு பாத்தீங்களா ? நினைவூட்டிய ஸ்டாலின் …!!

கொரோனா பாதிப்பு எதிரொலியால் தமிழக சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரம் எடுத்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம், மனநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 15 நாட்களாக 1000த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால் இதுவரை 42 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 397 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 ஆயிரத்து 444 பேர் பாதிக்கப்பட்டு, அங்கு மட்டும் 314 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்று பல்வேறு விமர்சனங்களை எதிர் கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

கொரோனாவில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்றெல்லாம் அரசு மீது விமர்சனங்கள் வாரி இறைக்கப்பட்டன. தற்போது கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகின்றது. இந்நிலையில் முதல்வர் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என துரைமுருகன் சொன்னபோது கிண்டல் செய்தார் . இன்று 150 ஊழியர்களை கொரோனா தாக்கி தலைமைச்செயலகம் மூடபட்டுள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |