Categories
சினிமா தமிழ் சினிமா

15 ஆண்டுகளுக்கு பின் படத்தில் இணையும் சோபனா,சுரேஷ் கோபி..!!

பெண்மையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் சுரேஷ்கோபி ,சோபனா இணைந்து நடிக்கின்றனர் 

பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு, பல முக்கிய மலையாள கதாநாயகர்களை கொண்டு37 ஆண்டுகளில்  60-கும்  மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது மகன் அனூப் சத்யன் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இவர் பல குறும்படங்களை இயக்கி தற்போது பெண்மையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் .

 

இந்தப் படத்தில் சுரேஷ்கோபி, நடிகை ஷோபனா, நஸ்ரியா உள்ளிட்டோர்  முக்கியாகதாபாத்திரத்தில்   நடிக்கின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘மக்களுக்கு’ என்ற படத்திற்கு பிறகு   ஷோபனாவும், சுரேஷ்கோபியும் இணைந்து நடிக்கும் படம் இதுவே. நாடாளு மன்ற தேர்தலில் தற்போது  சுரேஷ்கோபி போட்டியிடுவதால் தேர்தலுக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பில் இவர் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |