Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை திறப்பதினால் சமூக சீர்கேடு… மத்திய மாநில அரசை கண்டித்து… நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மது கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிபடும் இந்த சூழலில் டாஸ்மாக் கடையை திறந்ததற்கு எதிராக அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனால் சமூக சீர்கேடும், பெண்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பிரேம்சந்தர், ஜெயபிரகாஷ், குணசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க கோரியும் மத்திய மாநில அரசுக்கு எதிராக பல கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |