தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் கழிவுநீர் தொட்டியில் காய்கறிகளை போட்டு சுத்தம் செய்து எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அந்த வீடியோ எந்த மாநிலத்தில் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை. வீடியோவில் ஒரு தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தன்னிடம் உள்ள தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகளை, தெருவோரத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கழுவி சுத்தப்படுத்தி, பின் தள்ளுவண்டியில் அடுக்கி வைத்து எடுத்து செல்கிறார். இதையடுத்து காய்கறிகளை சாக்கடையில் வியாபாரி சுத்தம் செய்ததை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே அவரை விரட்டி சென்று பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அவர்கள் வண்டியில் இருந்த காய்கறிகளை எடுத்து குப்பையில் போட்டுவிட்டனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பெரும்பாலான மக்கள் தள்ளுவண்டியில் வரும் காய்கறிகள், புத்தம் புதியது மற்றும் விலை குறைவாக வாங்கலாம் என்று நம்புகின்றனர். ஆனால் இந்த வியாபாரியின் செயலை பார்த்தால் வாங்கும் மக்கள் இனி வாங்குவது கடினம் தான். எல்லா வியாபாரிகளும் அப்படி இறுக்கமாட்டார்கள். கஷ்டப்பட்டு தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு நேர்மையாக விற்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலரின் இந்த கேவலமான செயல் ஓட்டுமொத்த வியாபாரிகளுக்கும் கெட்ட பெயரை ஏற்படுவது தான் வேதனையாக இருக்கிறது.
https://youtu.be/kUnpDM6_-jc