Categories
அரசியல்

தேர்தல் வதந்திகளை சிறப்பாக கையாளும் சமூக வலைத்தளங்கள் …

தேர்தல் நேரங்களில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் சமூக இணையதளங்கள் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர் .

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

 இதனை அடுத்து தேர்தல் ஆணையம் தேவையற்ற வதந்திகளை தடுப்பதற்காக சமூக வலைதளங்களுக்கு தலைமை பொறுப்பில்  இருக்கக்கூடியவர்களை அழைத்து  ஆலோசனை கூட்டம் நடத்தியது இந்த ஆலோசனை கூட்டத்தில் whatsapp ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கலந்து கொண்டனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையம் கூறிய விதிமுறைகளை பின்பற்ற உள்ளதாக சமூக வலைதளங்கள் தேர்தல் ஆணையரிடம் தெரிவித்துள்ளனர்

Kiev, Ukraine – October 17, 2012 – A logotype collection of well-known social media brand’s printed on paper. Include Facebook, YouTube, Twitter, Google Plus, Instagram, Vimeo, Flickr, Myspace, Tumblr, Livejournal, Foursquare and more other logos.

மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்  120 ஆவது பிரிவின்படி வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர கால கட்டத்தில் எந்தவிதத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பது விதிமுறை அப்படி பிரச்சாரம் நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகள் மூன்று மணி நேரத்தில் அந்த பிரச்சார பதிவானது நீக்கப்படும் என்று சமூக வலைதளங்கள் உறுதியளித்துள்ளனர் மேலும் இவ்வாறு சமூக இணைய நிறுவனங்கள் ஆன்லைனில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அவர்களாகவே முன்வந்து விதிமுறைகளை பின்பற்றுவது இந்த வருடம் தான் முதல் முறை ஆகும்

Categories

Tech |