Categories
உலக செய்திகள்

கிரிக்கெட் வீரரின் டிஃப்ரெண்ட் கெட்டப்…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் நடிகர் விஜய்யின் கதாப்பாத்திரம் போல் ஒரு பாடலில் நடித்து அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  முன்னணி வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். இவர் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். இவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் தீவிர ரசிகர்கள் உள்ளனர். இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

https://www.instagram.com/p/CR6EEJYl8eN/?utm_source=ig_embed&utm_campaign=loading

அந்த வகையில் தர்பார் படத்தில் வரும் ரஜினி மற்றும் பாகுபலி படத்தில் வரும் பிரபாஸ் போன்றோர்களின் கதாப்பாத்திரங்களாக மாறி நடித்த வீடியோவை  தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது தெறி படத்தில் இடம்பெற்ற “செல்ல குட்டி” பாடலுக்கு விஜய் போல் நடித்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |