மத்திய மாலியிலுள்ள 3 கிராமங்களின் எல்லையிலிருந்து மர்ம நபர்கள் பொதுமக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் மொத்தமாக 51 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மாலியிலுள்ள Karou, Ouatagouna, Deouteguef என்னும் 3 கிராமங்களின் எல்லையிலிருந்து ஒரே நேரத்தில் மர்ம நபர்கள் பொது மக்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்த கொடூர தாக்குதலால் மொத்தமாக 51 பேர் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி பலரும் படுகாயமடைந்துள்ளார்கள்.
மேலும் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர்கள் வீடுகளை சூறையாடியும், கால்நடைகளை கூட்டமாக எடுத்தும் சென்றுள்ளார்கள். இதனையடுத்து மாலியின் ராணுவ செய்தி தொடர்பாளர் அந்த 3 கிராமங்களில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதை உறுதி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை அசோக மாவட்டத்தின் நிர்வாகி ஆளுநருக்கு தகவல் கொடுத்துள்ளார்.