கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கண்டிகை பகுதியில் அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பரான துரைராஜ் என்பவருடன் இணைந்து சொகுசு காரில் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் விருகம்பாக்கம் 80 அடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் நண்பர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த காரை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.