கோடை காலம் என்பதால் மண் பானை வியாபாரம் அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் பகுதியில் ஏராளமானோர் பானை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். எப்பொழுதும் பொங்கல் பண்டிகை மற்றும் சுப தினங்களில் மட்டுமே மண் பானை விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான மக்கள் மண் பானையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மண் பானையில் சமைத்து சாப்பிடுவது மற்றும் தண்ணீர் ஊற்றி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு ஆரோக்கியமானது கூட. இதனால், பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் மண் பானையை வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.