Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சோலார் சைக்கிள்” மாணவர்களின் வியக்க வைக்கும் திறமை…. குவியும் பாராட்டுக்கள்….!!

சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்த சகோதரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீர குருஹரிகிருஷ்ணன், சம்பத் கிருஷ்ணன் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைக்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இணையதளத்தில் உள்ள தகவல்கள் மூலமாகவும், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலமாகவும் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை இவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, சோலார் சைக்கிளானது சூரிய ஒளி படும் போது சுமார் 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாணவர்களின் வியக்க வைக்கும் திறமை பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.

Categories

Tech |