Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம்… மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்…!!

சூரிய கிரகணம் நிகழ்ந்ததையொட்டி கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இதனை கங்கன சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தஜதன்ஸ்புரா கிராமத்தில் சிலர் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Image result for Karnataka: Disabled children buried neck-deep during solar

சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது.

Image result for Karnataka: Disabled children buried neck-deep during solar

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் இதுபோன்ற நம்பிக்கைகள் வாயிலாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தக்கூடாது எனவும் அறிவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |