பெரம்பலூர் மாவட்டத்தில் சோலார் மின்விளக்கு அமைத்ததை 5 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகள் உள்ளன. ஒரு ஊராட்சிக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சோலார் விளக்கு அமைக்க பட்டதாக கூறும் நிலையில் அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் கூட இல்லை என ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதேபோன்று தமிழகம் முழுவதும் சோலார் விளக்குகள் அமைப்பதில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.