Categories
தேசிய செய்திகள்

#Budget2020 : 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் – நிர்மலா சீதாராமன் உறுதி …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், நடுத்தர குடும்பத்தின் வளர்ச்சியை கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா மூலமாக இந்தியாவின் வளர்ச்சி உலக அரங்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

மூன்று நோக்கங்கள்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல்

கடன் :

2014ஆம் ஆண்டு 52.2 விழுக்காடாக இருந்த நாட்டின் கடன் 2019ஆம் ஆண்டு 48.7 விழுக்காடாக குறைந்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சோலார் பம்புகள் அமைக்க உதவி :

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க மோடி அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்.

வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்படும்.

20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவிகள் அமைக்கப்படும்.

Categories

Tech |