தாய்லாந்து நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் வணிக வளாகம் ஒன்றுஅமைந்துள்ளது. அந்த வணிக வளாகம் முன் கார் நிறுத்தி அதிலிருந்து இறங்கிய வந்த ராணுவ வீரர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மக்களை நோக்கி கண்முடித்தனமாக சுட தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகி உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலரை பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
பின்பு 4 பேரில் உடல்களை வணிக வளாகத்தில் இருந்து சிறப்பு படையினர் மீட்டனர். மேலும் 31 பேர் காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய அந்நபர் பெயர் ஜக்ராபந்த் தொம்மா என அறியப்பட்டு உள்ளார். அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.