இலங்கையில் தீவிரமடைந்துள்ள போராட்டங்களை தடுக்க ராணுவ வீரர்கள் சோதனை பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. எனவே, நாட்டில் பிரதமர் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார். இன்று கொழும்பு நகரத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அரசு அலுவலகங்களை கைப்பற்றி இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாள ராணுவத்தினருக்கு அதிகாரமளித்திருக்கிறார்.
எனவே, கொழும்பு நகரத்தில் போராட்டத்தை தடுக்க ராணுவ வீரர்கள் கவச வாகனத்தில் நின்று கொண்டு துப்பாக்கிகளை ஏந்தி சோதனை பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.