Categories
உலக செய்திகள்

ஆதிக்கம் செலுத்தும் பயங்கரவாத அமைப்பு…. அதிரடி நடவடிக்கையில் சோமாலியா ராணுவம்…. தகர்க்கப்பட்ட பதுங்குகுழிகள்….!!

அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோமாலியாவில் ஜனாலே என்ற பகுதியானது லோயர் ஷாபெல்லேவிற்கு தெற்கில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் பஸ்லே மற்றும் புலோ-அலூண்டி கிராமங்களில் பாதுகாப்பு குழுவினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையினால் அங்கிருந்த அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 7 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |