Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பணிக்கு செல்ல வேண்டும்!”…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நிறுவனங்கள், ஊழியர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தன. எனவே மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. கொரோன விதிமுறைகளை தளர்த்துவதாக அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.

நாட்டில், ஒவ்வொரு நாளும் கொரோனோ பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படலாம். அந்த சமயத்தில் மருத்துவ பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நடவடிக்கையால் பிறருக்கு தொற்று பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும் அத்தியாவசிய மருந்து தேவைகள் தொடர்ந்து நடைபெற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |