Categories
தேசிய செய்திகள்

தகனம் செய்வதற்கு சில நிமிடத்திற்கு முன்… உயிருடன் எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட மூதாட்டி தகனம் செய்யும்போது உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதையடுத்து 76 வயதான சகுந்தலா என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். திடீரென்று அவருக்கு உடல்நிலை மோசமான காரணத்தினால் உறவினர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் வெளியில் ஆம்புலன்சில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். சிறிது நேரத்தில் மூதாட்டி கைகால் அசைவில்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து அவரது உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்து தகனம் செய்வதற்கு அழைத்துச் சென்றனர். தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் அழுது கொண்டே கண் விழித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Categories

Tech |