திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் உள்ளத்தில் அரசியல் கருத்துக்களைவிட சுயமரியாதை கனல் எரிந்து கொண்டிருப்பதை நான் பலமுறை அவரிடத்தில் பார்த்திருக்கின்றேன். இடுப்பில் கட்டி இருக்கின்ற அந்த துண்டு தோலில் போவதற்கு எத்தனை போராட்டம் ? என்று கேட்ட பொழுது, எத்தனை போராட்டம் என்று நாம் நினைக்கின்ற போது, எவ்வளவு பெரிய தியாகத்தை நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கிறார்கள்.
மற்ற கட்சிக்கும் நம்ம கட்சிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஒரு லிமிடெட் கொள்கையோடு தான் அவர்கள் இருப்பார்கள், ஆனால் நாம் மதத்திலும் கொள்கை வைத்திருக்கிறோம், சமுதாயத்தில் கொள்கை வைத்திருக்கிறோம், மொழியிலும் கொள்கை வைத்திருக்கிறோம், இனத்திலும் கொள்கை வைத்திருக்கிறோம், எல்லாவற்றிற்கும் கொள்கை வைத்திருக்கின்றோம். ஆகையால் தான் சிலவற்றில் பல பேருக்கு நம்மை பிடிப்பதில்லை.
ஒன்றை மட்டும் சொல்லிட்டு போவது அல்ல, இந்த இயக்கத்தை கட்டி காப்பதில், வளர வேண்டும் என்று நினைப்பதில் பேராசிரியரின் உள்ளம் அப்படிப்பட்டது. நினைத்துப் பாருங்கள்…. பெரியார் தொண்டனாக இருந்தவர், அண்ணாவோடு சேர்ந்து, திமுகவினை ஊன்றுகிற போது அண்ணா ஊன்றிய போது அதற்கு நீர் ஊற்றியவர்…
அதற்குப் பிறகு தளபதியினுடைய அப்பாவை விட ஒரு வயது மூத்தவர்…. அவர் இவரை செயல் தலைவராகி… அவர் பொதுச் செயலாளராக பணியாற்றினார்… அவர் இவர் தலைவர் ஆக்கிவிட்டு தான் பொதுச்செயலாளராக இருந்து பணியாற்றுகிறார் என்றால்… இந்த உள்ளத்தை பாராட்டுவதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. லேசில் அது வராது என தெரிவித்தார்.