ஜெர்மன் ஆறு ஒன்றில் சிலர் முதலை ஒன்றை பார்த்ததாக தெரிவித்துள்ளதையடுத்து, அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் இருக்கும் Unstrut என்ற ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றபோது முதலை ஒன்றைக் பார்த்ததாக பலர் கூறியுள்ளனர். இது பற்றி காவல்துறையினருக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் இயற்கையாகவே முதலைகளே கிடையாது என்பதால் அவை எந்த இடத்திலிருந்து இங்கு வந்தன என்பது பற்றி தெரியவில்லை.
எனவே, ஆற்றில் முதலையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதுவரை வலைவீசி தேடியும் முதலை கிடைக்காத நிலையில், Unstrut ஆற்றில் குளிப்பதற்கு செப்டம்பர் மாதம் 6ஆம்தேதி வரை மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.