Categories
மாநில செய்திகள்

“சிலர் ஊரார் கால் பிடிப்பார்” முதல்வருக்கு கமல் பதிலடி..!!

பிக் பாஸ் மூலம் நன்றாக இருக்கும் குடும்பத்தை கமல் கெடுப்பதாக முதல்வர் பழனிசாமி கடும் சொற்களால் சாடினார். அவருக்கு “நான் ஆணையிட்டால்” என்ற எம்.ஜி.ஆர்., பாடல் மூலம் பதிலடி தந்துள்ளார்.

முதல்வரின் கருத்துக்கு கமலிடம் இருந்தும் கடுமையான எதிர்வினை வரும் என அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர். எதுகை மோனையில் முதல்வரை கிழி கிழி என கிழிப்பார் என்று நினைத்தனர். ஆனால் கமலோ, பிக் பாஸ்க்கு முதல்வர் மூலம் விளம்பரம் கிடைத்திருக்கிறதே என மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி கமல் டிவிட்டரில், “முதல்வரும் பிக் பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது?” என ஒரு புண்ணகை எமோஜியுடன் பதிவிட்டார்.

இதனை பலரும் கிண்டல் செய்து பின்னூட்டம் இட்டனர்.
இந்த நிலையில் தற்போது, `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.
முதல்வராக எடப்பாடி பழனிசாமியை சசிகலா தேர்வு செய்த போது அவர் காலில் விழுந்து முதல்வர் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |