Categories
மருத்துவம்

“பெண்களே உங்கள் அழகை முகப்பரு கெடுக்கிறதா” கவலையை விடுங்கள்…. இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!!

பெண்கள் ஒவொருவரும் தங்கள் முகத்தை பொலிவுடன் மிகவும் அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் எல்லாப் பெண்களின் அழகையும் அச்சுறுத்துவது முகப்பருக்கள் தான். பெண்கள் இரவு தூங்கி காலையில் எழுந்ததும் முதலில் கண்ணாடியை பார்க்கிறார்கள். முகத்தில் பரு ஏதாவது இருந்து விட்டால் அவ்வளவு தான்  அன்றைய நாள் முழுக்க  பருவைப் போக்க என்ன செய்யலாம் என்று அவர்கள் மனம் சிந்திது கொண்டே இருக்க, என்னென்னவோ செய்வார்கள்.

Image result for முகப்பருக்கள்

முகத்தில் பரு வந்த பின்பு அதற்கான சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்னதாகவே  அதை தடுப்பதேமிக நல்லது. ஆம், முகப்பரு வராமல் இருக்க வேண்டுமானால் மலச்சிக்கல் வராத அளவுக்கு நீங்கள் வயிற்றைப் பராமரிக்க வேண்டும். அதாவது உணவு நன்கு ஜீரணித்து வெளியேற  வேண்டும். அதே போன்று தலையில் அதிகமாக பேண்களும், பொடுகுத் தொல்லையும்  இருக்கவே கூடாது.

Image result for பொடுகுத் தொல்லை

மேலும், ஹார்மோன் பிரச்சினை, கைகளில் நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம்,  அதிக அளவில் உணவில் எண்ணெய் பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் கட்டாயம் தடுக்க வேண்டும். வீட்டில் ஒருவர் பயன்படுத்திய தலையணை உரை, சோப், டவல் போன்றவைகளை நீங்கள் பயன்படுத்தாமல், தனித்தனியாக தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Image result for உணவில் அதிக அளவு எண்ணெய்,

ஏனென்றால் முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இவற்றையெல்லாம் இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.முகப்பருக்கள் வராமல் இருப்பதை தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கிய அவசியம். எளிதில் ஜீரணமாகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.

Image result for அழகான முகம்

பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை அதிகமாக குடிக்க  வேண்டும். முக்கியமாக முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லைக்கு முறையான சிகிச்சை மேற்கொண்டு அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்திவந்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். இப்படி செய்தால் பருக்கள் வருவதை முற்றிலும் தவிர்த்து, அழகான தோற்றத்தை பெறலாம் .

Categories

Tech |