தேனி மாவட்டம் கேரளா எல்லையோர மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள ஏராளமான தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று நாட்கள் முன்பு கேரளாவில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து எந்த வாகனங்களும் தமிழ்நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் வேலைக்கு செல்வோர் பெரும்பாலும் தேனி மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் 10 பேர் கொண்ட ஒரு குழு மேற்கு தொடர்ச்சி மலை வழியாக நடந்து வந்தனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்கபுரத்தை சேர்ந்த இவர்கள் நடந்து வந்து கொண்டு இருந்த பொது எதிர்பாராதவிதமாக காட்டுத் தீ ஏற்பட்டது.
இந்த பகுதியில் உள்ள புற்கள் எல்லாமே காய்ந்து போய் இருந்ததால் தீயின் தாக்கம் வேகமாக பரவியது. இதனால் விஜய மணி , கீர்த்திகா என்ற மூன்று வயது குழந்தை சம்பவ இடத்திலே உயர்ந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த மற்றவர்கள் உடனடியாக தங்கள் உறவினருக்கு தகவல் அளித்தையடுத்து மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் அதிரடி படையினர், தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நாலு மணி நேரம் பயணம் மேற்கொண்டு அங்கு பலரை இருந்த பலரையும் காப்பாற்றிய நிலையில் மஞ்சு , மகேஷ் என்ற இரு பெண்மணிகள் கீழே கொண்டு வரும்போது உயிரிழந்தனர். காட்டுத்தீயால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.