திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அகில இந்தியாவிலேயே 1957இல் இருந்து ஒரே சின்னத்தில் வெற்றி பெறுகின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், திமுகவை தவிர வேற எந்த கட்சியும் கிடையாது. 1957இல் இந்த தியாகராயர் நகர் தொகுதியில் ஜேசுபாலன் என்றவர் போட்டியிட்டார்.
அந்த ஜேசுபாலனுக்கு உதயசூரியத்திலே ஓட்டு கேட்டவர்கள். இன்று ஜே.கருணாநிதிக்கு கேட்கிற வரை, ஒரே சின்னத்திற்கு கேட்கிற யோக்கியதை இங்கு முன்னாலே உட்கார்ந்து இருக்கிற திமுக கட்சிக்காரர்களை தவிர வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.
ஆனால் திமுகவை பார்த்து எவன், எவனோ சவால் விடுகிறான். ஊர் பெயர் தெரியாத உலறுவாய் எல்லாம் பேசுகிறான். அதற்கு காரணம் இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் பழைய வரலாற்றை நான் சொல்லியாக வேண்டும். இந்த இயக்கம் எப்படி வளர்ந்தது ? இனிமேல் பொதுக்கூட்டம் நடத்தினால் கழக வரலாறை ஒரு 60 ஆண்டு காலம் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், சொல்லணும்.
இன்னைக்கு தெரியாமலே எவனோ இப்படியே போய்க் கொண்டிருக்கிறான். இன்றைக்கு இருக்கக்கூடிய இளைய சமுதாயம் இந்த மண்டபத்தில் சரிநிகர் சமமாக உட்கார்ந்து இருக்கிறோம் என்று சொன்னால் இந்த சமத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என தெரிவித்தார்.