சுஷ்மா சுவராஜ் அனைவராலும் ஒருமனதாக போற்றப்பட்டு மதிக்கப்பட்டவர் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் (67 வயது) மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள் மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டதாவது, சுஷ்மாஸ்வராஜ் ஜி காலமானது பற்றி மிகவும் வருத்தமாக இருக்கிறது … அவர் அத்தகைய ஆற்றல்மிக்க தலைவராக இருந்தார், அனைவராலும் ஒருமனதாக போற்றப்பட்டு மதிக்கப்பட்ட ஒருவர். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும். அவருடைய குடும்பத்தின் மீது உள்ளது.. அவர்களுடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
Extremely sad to hear about the passing away of #SushmaSwaraj ji…she was such a dynamic leader, someone who was unanimously admired and respected by all. My thoughts and prayers with her family. May her soul rest in peace 🙏🏻
— Akshay Kumar (@akshaykumar) August 7, 2019