Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியுடன் சென்ற தந்தை-மகன்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

காவல் நிலையத்திற்கு தந்தை மகன் இருவரும் கத்தியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ஸ்டீபன் ராபர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிலிப் ராய்சீன் டேவிட் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை பிலிப் எடுத்து மோட்டார் சைக்கிளில் இருக்கும் பெட்ரோல் டேங்க் மீது உள்ள பையில் வைத்துவிட்டு காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றுள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்த காவல்துறையினர் தந்தை மகன் இருவரையும் நிறுத்தி விசாரித்த போது தான், இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கொடுங்கையூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் பணம் தர வேண்டும் எனவும், அந்த நபரை மிரட்டுவதற்காக தான் இருவரும் கத்தியுடன் வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நபர் இல்லாததால் இருவரும் புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தந்தை மகன் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |